கர்த்தருடைய ஜெபத்தில் வரும் முதல் வேண்டுதல் நம்முடைய தேவைகள் சந்திக்கப்பட வேண்டும் என்பதாயிராமல், தேவனுடைய நாமம் மகிமைப்பட வேண்டும் என்பதாயிருக்கிறது. ” தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக” என்று நாம் ஜெபிக்கும்பொழுது அவர் பரலோகத்தில் எப்படி ஆராதிக்கப்பட்டு, உயர்த்தப்பட்டு, போற்றப்படுகிறாரோ, அதுபோலவே பூமியிலும் அவருடைய நாமம் ஆராதிக்கப்பட்டு உயர்த்தப்பட வேண்டும் என நாம் ஜெபிக்கிறோம்.
கர்த்தருடைய ஜெபத்தில் வரும் முதல் மூன்று விண்ணப்பங்களையும் பரலோகம் வடிவமைக்கிறது, “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக” (மத்தேயு 6 : 9 – 10). இந்த விண்ணப்பங்கள் ஒவ்வொன்றும், பரலோகத்தில் உள்ள காரியங்களுக்கு நேராக நம்முடைய மனதை உயர்த்துகின்றன.
இப்பொழுதும் பரலோகத்தில் உள்ள தூதர்கள் யாவரும்: “சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது!” என்று ஆர்பரிக்கிறார்கள். பரலோகத்தில் உள்ள ஒவ்வொரு படைப்பும் சேர்ந்து,
“சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக!” என்கிறார்கள்
வெளிப்படுத்தின விசேஷம் 5:13
தேவனுடைய நாமம் பரலோகத்தில் கனப்படுத்தப்பட்டு போற்றப்படுவதால், பரலோகம் இடைவிடாத துதிகளால் நிறைந்திருக்கிறது. அதே சமயம் தேவன் பூமியை நோக்கி பார்க்கும் போது, “நித்தமும் இடைவிடாமல் என் நாமம் தூஷிக்கப்படுகிறது என்று கர்த்தர் சொல்லுகிறார்”(ஏசாயா 52 :5).
பூமியிலுள்ள காட்சிகளுக்கும், பரலோகத்தில் உள்ள காட்சிகளுக்கும் பெரிய வேறுபாடு இருக்க கூடாது. இந்த வேறுபாட்டில் தான் இயேசு கிறிஸ்து நம்மை முதலாம் விண்ணப்பமான, “பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” உம்முடைய நாமம் பரலோகத்தில் மகிமைப்படுத்தப்படுவது போல பூமியிலேயும் மகிமைப்படுத்தப் படுவதாக, என்று ஜெபிக்க அழைக்கிறார்.
இந்த ஜெபத்தை நாம் ஜெபிக்கும்போது, பூமியிலுள்ள ஜனங்கள் யாவரும் அவரை போற்றுவதற்கு ஏதுவாக அவர் செயல்பட வேண்டும் என நாம் ஜெபிக்கிறோம். அதுமட்டுமன்றி அவரை மேன்மையான பொக்கிஷமாக அனைவரும் எண்ண வேண்டும் என ஜெபிக்கிறோம். “ஜனங்கள் உம்மை நேசிக்கவும், விசுவாசிக்கவும் , கீழ்படியவும் செய்யும். இதை எல்லா இடங்களிலும் செய்து, இந்த ஜெபத்திற்கான பதிலை என்னிலிருந்தே தொடங்கும்” என நாம் வேண்டிக்கொள்கிறோம்.
தியானத்திற்கு உரிய கேள்விகள்
இப்பொழுதே உங்கள் பரலோக பிதாவை நோக்கி இந்த ஜெபத்தை செய்ய
நீங்கள் விரும்புகிறீர்களா?
Series : கர்த்தருடைய ஜெபத்தில் இயேசுவோடு 30 நாட்கள்
உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக