நாம் ஜெபத்தில் என்னதான் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், கிறிஸ்த்தவர்கள், இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என எண்ணுகிறார்கள். ஜெபிக்கவேண்டும் என்கிற விருப்பம் நமக்கு அதிகம் இருக்க வேண்டும். நாம் அதிக கட்டுப்பாடுடனும், அதிக ஆர்வத்துடனும், அதிக விசுவாசத்துடனும் ஜெபிக்க வேண்டும் . “இதில் கேள்வி என்னவெனில் நாம் எப்படி ஜெப வாழ்வில் வளர்வது ?”
நம் இயேசுவோடு இருந்த சீஷர்கள், பரிசேயர்களின் ஆடம்பரமான ஜெபங்களுக்கும் வெறும் வார்த்தைகள் நிறைந்த புறஜாதியார்களின் ஜெபங்களுக்கும் பரீட்சயமானவர்கள் (மத்தேயு 6 :7). ஆனால் அவர்கள் இயேசு கிறிஸ்துவில் வித்தியாசமான ஜெப வாழ்வை கண்டனர், அது அவர்களை ஆழமாக ஈர்த்தது.
ஆகவே அவர்கள் வந்து இயேசுவை நோக்கி, ” ஆண்டவரே, எங்களுக்கு ஜெபிக்க காற்றுத்தாரும் என்றார்கள் (லூக்கா 11 : 1). இயேசுவே நீர் ஜெபிக்கிற விதம், இதுவரை நாங்கள் கண்டிராத ஒன்றாக உள்ளது. எங்கள் அனுபவத்தில் நாங்கள் கண்டதில் உம்முடைய ஜெபம் மிகவும் சிறப்பானதாகவும் மிகவும் ஆழமானதாகவும் இருகின்றது. உமக்கு தேவனுடன் மிகவும் நெருக்கமான மற்றும் உண்மையான உறவு இருகின்றது. அதை நாங்களும் பெற்றுக்கொள்ள விரும்புகிறோம். நீர் ஜெபிப்பது போல நாங்களும் ஜெபிக்க கற்றுத் தருவீரா ?
கர்த்தருடைய ஜெபத்தில் உள்ளது என்னவெனில், தேவ குமாரன் தாமே, நமக்கு ஜெபிக்கும் முறையை கற்றுக்கொடுப்பதே! இப்பெரும் போதனையையும் அவரின் ஒவ்வொரு வார்த்தையையும் ஆவலுடன் கேட்க யார் தான் விரும்பமாட்டார்?
நமது ஆண்டவர், தேவனிடத்தில் கேட்கும்படி நமக்கு ஆறு காரியங்களை கற்பிக்கிறார். அவற்றுள் தேவ நாம மகிமைக்கென நாம் கேட்கும் மூன்று,
1) அவருடைய நாமம் பரிசுத்தப்படுவதாக
2) அவருடைய ராஜ்யம் வருவதாக
3) அவருடைய சித்தம் செய்யப்படுவதாக
நமது நன்மைக்கென நாம் கேட்கும் மூன்று
4) நமக்கு தேவையானதை தேவன் தாமே தருவாராக
5) நம்முடைய பாவங்களை தேவன் நமக்கு மன்னிப்பாராக
6) தீமையினின்று நம்மை இரட்சித்துக்கொள்ளுவாராக
அடுத்து வரும் பக்கங்களில், நாம் கேட்கக்கூடிய அனைத்தையும், நமக்கு தேவையான அனைத்தையும் இந்த ஆறு காரியங்கள் உள்ளடக்கியுள்ளதை குறித்து காணப்போகிறோம்
தியானத்திற்கு உரிய கேள்விகள்
இந்த ஆறு காரியங்களில் எவற்றை நீங்கள் ஜெபத்தில் அதிகமாக (அல்லது குறைவாக) தேவனிடத்தில் கேட்கிறவர்களாக உள்ளீர்கள் ?
Series : கர்த்தருடைய ஜெபத்தில் இயேசுவோடு 30 நாட்கள்
கர்த்தரிடத்தில் கேட்கவேண்டிய ஆறு காரியங்கள்