கள்ளனின் கதையானது, இயேசு கிறிஸ்துவின் கிருபையை வல்லமையான விதத்தில் வெளிப்படுத்துகிறது. இந்தக் கதை நம்மிடம் இன்று எவ்வாறு பேசுகிறது என்பதைப் பின்வரும் கேள்விகளுடன் விவாதிக்கலாம்.
அதனுடனேகூட, பின்வரும் பகுதிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றைப் படிக்கவும்:
• லூக்கா 23:39-43 (கள்ளனின் கதை)
• எபேசியர் 2:8-9 (நாம் எவ்வாறு கிரியைகளினால் அல்லாமல், கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்படுகிறோம் என்பதைப்பற்றியது)
• ரோமர் 5:6-8 (தேவனின் அன்பு கிறிஸ்துவின் சிலுவைமூலமாக வெளிப்படுத்தப்படுவதைப்பற்றியது)
கலந்துரையாடல் கேள்விகள்:
1. கள்ளனின் கதையுடன் உங்களைத் தொடர்புப்படுத்த முடியுமா? ஆம் எனில், எப்படி?
2. நீங்கள் இயேசுவின் அருகில் சிலுவையில் அறையுண்டிருந்தால், தன்னை நினைவுகூரும்படி இயேசுவைக் கேட்டுக்கொண்ட கள்ளனைப்போல், நீங்களும் கேட்டிருப்பீர்களா, அல்லது மற்றொரு கள்ளனைப்போல் இயேசுவை இகழ்ந்து பேசியிருப்பீர்களா? ஏன்?
3. நீங்கள் இரட்சிக்கப்படமுடியாத அளவுக்கு மிக மோசமான நிலையில் இருக்கிறீர்கள் என்கிற நிலைப்பாடு அல்லது இரட்சிப்புக்காக உங்கள் சொந்தக் கிரியைகளை நம்பியிருக்கும் நிலைப்பாடு இவற்றுள் எந்த நிலைப்பாட்டை நீங்கள் மிகவும் சார்ந்திருப்பதாக உணர்கிறீர்கள்?
4. 1 முதல் 10 வரையிலான ஓர் அளவுகோலில், அந்தக் கள்ளனை இயேசு எவ்வளவாய் நேசித்தார் எனக் கூறுவீர்கள்? ஏன்? அதேபோல், உங்களை இயேசு எவ்வளவாய் நேசிக்கிறார் என்பீர்கள்? ஏன்?
5. இன்று நீங்கள் இயேசுவிடம் திரும்பி, உங்களை அவர் நினைவுகூரும்படிக் கேட்பதற்கு, உங்கள் வழியில் தடையாக நிற்பது எது?